முட்டை கடல்பாசி
தேவையான பொருட்கள்:
கடல் பாசி - 10 கி
சீனி - 5 ஸ்பூன் அல்லது தேவையான அளவு இனிப்பு
பால் - 1 கப்
முழு முந்திரி பருப்பு - ஐந்து அல்லது ஏழு
முட்டை ஓடு - 5 அல்லது 7
செய்முறை:
முட்டைகளை மேல்புறமாக சிறிய துளை செய்து உள்ளே இருப்பதை எடுத்து வேறு உபயோகத்திற்க்கு வைத்து கொள்ளவும்.
முட்டை கூடுகளை நீரில் நன்றாக அலசி சுததமாக்கி காயவைத்துக்கொள்ளவும். கூடுகள் உடைந்து விடாமல் கவனமாக கழுவவும்.
பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு காய்ச்சவும்.
பால் பொங்கியதும் கடல் பாசியை போட்டு ஒரு கரண்டி கொண்டு கலந்து கொண்டிருக்கவும்
கடல் பாசி கரைந்ததும், சீனியை சேர்த்து, சீனி கரைந்ததும் 2 நிமிடம் கழித்து இறக்கி ஆற் விடவும்.
லேசாக ஆறியதும் ஒரு முட்டை கூடை எடுத்து கடல் பாசி கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து மெதுவாக முட்டையினுள் விடவும். 2 ஸ்பூன்கள் விட்டதும் ஒரு முந்திரியை வைத்து மேலாக இன்னும் கொஞ்சம் கடல் பாசியை ஊற்றவும். முட்டை நிறைந்ததும் அதை அசையாமல் எடுத்து பிரிட்ஜில் முட்டை வைக்கும் இடத்தில் வைக்கவும்.
இது போல எல்லா முட்டைகளிலும் ஊற்றி ப்ரிட்ஜில் அடுக்கவும்
ஒரு ம்ணிநேரம் கழித்து பார்த்தால் கடல் பாசி நன்றாக செட்டாகி இருக்கும். மெதுவாக முட்டை ஓட்டை உடைத்து எடுத்தால் அவித்த முட்டை போன்றே இருக்கும். குழந்தைகள் எப்பொழுதும் உண்ணும் அவித்த முட்டை தானே என்று சாப்பிட்டால்,இது சுவையான இனிப்பு முட்டை என்பதை அறிந்து மகிழ்வார்கள்.