முட்டை உப்புமா செய்முறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

முட்டை - 2

வெங்காயம் - 1 (பெரியது)

தக்காளி - 1 (சிறியது) (விருப்பப்பட்டால்)

கடுகு, உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

மிளகாய் - 2

மல்லி, கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

ரவையை மணம் வருமாறு வறுத்துக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, மல்லி கட் செய்துகொள்ளவும். முட்டையை உப்பு மிளகு சேர்த்து பீட் செய்யவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, தக்காளி, மிளகாய், உப்பு போட்டு வதக்கி மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

ஒரு கடாயில் நெய் விட்டு பீட் செய்த முட்டையை ஸ்கிராம்பில் செய்து கொள்ளவும்.

கொதிவந்தவுடன் மல்லி இலை, வறுத்த ரவையை போட்டு கட்டிப்பிடிக்காமல் சிம்மில் வைத்து கிளறவும். பதம் வந்தவுடம் ஸ்கிராம்பில் முட்டையை சேர்க்கவும்.

சுவையான சத்தான முட்டை உப்புமா ரெடி.

குறிப்புகள்: