முட்டை ஆப்பம் (இனிப்பு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பம்:

பச்சரிசி - இரண்டு கப்

உளுந்து - ஒரு மேசைக்கரண்டி

ஜவ்வரிசி - ஒரு மேசைக்கரண்டி

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

தேங்காய் துருவல் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

பழைய சாதம் - ஒரு கை குத்து

முட்டை கலக்க:

முட்டை - மூன்று

சர்க்கரை - அரை டம்ளர்

ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி

சுட்டு எடுக்க:

எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி

நெய் - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

பச்சரிசியில் உளுந்து,வெந்தயம்,ஜவ்வரிசி போட்டு இரவு ஊற வைத்து காலையில் அரைக்கவும்.

அரைக்கும் போது அத்துடன் துருவிய தேங்காய், பழைய சாதம் போட்டு கிரைண்டரில் அரைத்து புளிக்க விடவும்.

புளித்த மாவில் உப்பு, சோடாமாவு கலந்து ஆப்பத்துக்கு கரைக்கும் பதத்தில் கரைத்து ஆப்ப சட்டியில் ஊற்றி ஆப்பம் போல் சுட்டு எடுக்கலாம்.

இப்போது முட்டையில் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாக அடித்து வைக்கவும்.

ஆப்ப சட்டியில் ஒரு கரண்டி மாவை ஊற்றி சுற்றியதும் அடித்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஒரு குழி கரண்டி அளவு எடுத்து நடுவில் ஊற்றி மறுபடியும் ஒரு முறை சுழற்றி சுற்றிலும் எண்ணெய், நெய் கலவை ஊற்றி தீயை சிம்மில் வைத்து மூடி வைக்கவும். இப்போது வெந்ததும் ஆப்பம் எடுப்பது போல் எடுக்கவும். இதே போல் எல்லா ஆப்பத்தையும் சுட்டெடுக்கவும்.

குறிப்புகள்: