முட்டையும் கோஸ் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோஸ் - கால் கிலோ

முட்டை - ஒன்று

வெங்காயம் - ஒன்று

பச்சை மிளகாய் - ஒன்று

தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)

கருவேப்பிலை - சிறிது

மல்லிக்கீரை - சிறிது

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

கடுகு உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் - கால்ஸ்பூன்

சீரகத்தூள் - கால்ஸ்பூன்

மிளகுத்தூள் - கால்ஸ்பூன்

மஞ்சள்தூள் - கால்ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முதலில் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்கு அலசி பொடியாக நறுக்கி வைக்கவும்.

முட்டையை உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், கோஸ் போட்டு வதக்கிய பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து அடித்து வைத்த முட்டையை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.

பின்பு நறுக்கிய மல்லி இலை சேர்த்து பிரட்டி இறக்கவும். விரும்பினால் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.

சுவையான முட்டையும் கோஸ் பொரியல் ரெடி.

குறிப்புகள்: