மீன் முருங்கைக்காய் சால்னா
தேவையான பொருட்கள்:
கண்ணாடி கெண்டை மீன் - அரை கிலோ
முருங்கைக்காய் - 2
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
வெங்காயம் - 1 பெரியது
பூண்டு - 4 பல் ( தட்டியது)
தக்காளி - 1 பெரியது
மிளகாய் -2
மீன் மசாலா - 3 டீஸ்பூன்.
புளி - எலுமிச்சை அளவு.
கொத்தமல்லி, கறிவேப்பிலை - கொஞ்சம்.
உப்பு - தேவைக்கு.
தேங்காய் - (3 டேபிள் ஸ்பூன், 1 ஸ்பூன் அரிசி மாவுடன் அரைத்துக்கொள்ளவும்)
செய்முறை:
மீனை சுத்தம் செய்து துண்டாக்கி, கல் உப்பு, மஞ்சள்பொடி போட்டு கழுவி வைக்கவும்.
முருங்கைக்காயை கட் பண்ணி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி நறுக்கி வைக்கவும். புளி கரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பூண்டு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி, உப்பு போட்டு மசிய விடவும். பின்பு மீன் மசாலா சேர்த்து புளித்தண்ணீர் விடவும்.
நன்கு மசாலா வாடை அடங்கியவுடன் முருங்கைக்காய் போடவும், கொதிவந்தவுடன் மீன் போடவும்.
ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் விடவும். கொதி வந்து சிம்மில் வைத்து எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லி இலை தூவவும்.
முருங்கைக்காய் மணமுடன் கூடிய சால்னா மீன் ரெடி.