மீன் மிட்டா
தேவையான பொருட்கள்:
சீலா மீன் - அரை கிலோ
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - அரை கட்டு
பட்டை - ஒன்று
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
செய்முறை:
மீனை சுத்தமாக கழுவி முள்ளில்லாமல் பிரித்தெடுக்கவும்.
எண்ணெயை காய வைத்து பட்டையை போட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
பிறகு பாதி கொத்தமல்லி தழை போட்டு தக்காளி சேர்த்து வதக்கி பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு போட்டு நல்ல வதக்கவும்.
பிறகு மீனை முள் இல்லாமல் நறுக்கி சேர்த்து தேங்காய் பாலையும் ஊற்றி இரண்டு கப் தண்ணீரும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து நல்ல கொதித்து கெட்டியாக ஆனதும் இறக்கி கொத்தமல்லி தழை தூவவும்.
ரெட் கலரில் பார்க்கவே நல்ல இருக்கும் கூட்டுடன். இதற்கு புளி தேவையில்லை.
சுவையான மிட்டா மீன் ரெடி.