மீன் பிரியாணி (1)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மீன் பொரிப்பதற்கு:

அதிகம் முள்ளில்லாத மீன் - ஒரு கிலோ (வஞ்சிரா)

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க

பிரியாணிக்கு வதக்குவதற்கு:

பசு நெய் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - அரை கப்

பட்டை, கிராம்பு, ஏலம் - சிறிதளவு (கிராம்பு 5 க்கு அதிகம் வேண்டாம்)

நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கிலோ

நறுக்கிய பெரிய வெங்காயம் - 4-5

பச்சை மிளகாய் - 5

இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

தக்காளி - 4

பொடியாக நறுக்கிய மல்லி இலை - ஒரு கட்டு

பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கட்டு

கரம் மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி

ஜாதிப்பத்திரி பொடி - கால் தேக்கரண்டி

சிவப்பு கலர் - கால் தேக்கரண்டிக்கும் குறைவு

தயிர் - அரை கப்

உப்பு - தேவையான அளவு

எலுமிச்சம்பழச்சாறு - கால் கப்

பாசுமதி அரிசி - 4 டீ கப் (தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறியது)

தயிர் சட்னிக்கு கீழ்காணும்வற்றை ஒன்றாக கலக்கவும்:

தயிர் - 3/4 கப்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

பொடியாக நறுக்கிய தக்காளி - கால்

பொடியாக நறுக்கிய மல்லி, புதினா - 2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

மீனில் 6 துண்டங்களை மட்டும் மாற்றி விட்டு அதன் முள்ளை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்

மீதமுள்ள மீனில் மசாலாவை போட்டு ஒரு மணி நேரம் கழித்து எண்ணெயில் முறுகாமல் முக்கால் பாகம் வேகும் அளவு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு பரந்த நாண்ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை ஒரு 5 நிமிடம் வதக்கவும்.

பிறகு தக்காளி, கொத்தமல்லி, புதினா, உப்பு சேர்த்து மேலும் ஒரு 20 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்ப்பதால் தக்காளி சீக்கிரத்தில் மசிந்து விடும்.

அதனுடன் கரம் மசாலா பொடி, ஜாதிப்பத்திரி பொடி, நறுக்கி வைத்த முள் நீக்கிய மீன், கலர் சேர்த்து கிளறவும்.

பிறகு ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் விகிதம் 9 கப் தண்ணீர் ஊற்றி தயிரை சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் ஊறவைத்த அரிசியை நீர் வடித்து கொட்டவும். நல்ல தீயில் 5 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.

தண்ணீர் குறைந்து வரும்பொழுது எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். குறைந்த தீயில் 45 நிமிடம் மூடி வைக்கவும்.

10 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறவும். 45 நிமிடத்தில் அரிசி வெந்திருக்கும். இதனுடன் பொரித்த மீனை சேர்த்து உடையாமல் இடையிடையே சேர்த்து ஒரே ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

அருமையான மீன் பிரியாணி தயார். இதனுடன் தயிர் சட்னியும் சேர்த்து பரிமாற சுவையோ சுவை.

குறிப்புகள்: