மீன் பிரியாணி





தேவையான பொருட்கள்:
சீலா மீன் - அரை கிலோ
அரிசி - மூன்று கப்
மீனை தாளிக்கவும்:
பெரிய வெங்காயம் - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று தேக்கரண்டி
பெரிய தக்காளி - ஐந்து
பச்சை மிளகாய் - ஏழு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று
எண்ணெய் - கால் கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - மீன் பொரிக்க தேவையானது
கேரட், பீன்ஸ், பட்டாணி - ஒரு கப்
எலுமிச்சை - ஒன்று
ரெடி கலர் பொடி - ஒரு பின்ச்
கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
மீன் - கால் கிலோ (லேசாக பொரித்து போடவும்)
கீ ரைஸ்:
எண்ணெய் - கால் கப்
பட்டை - சிறியது ஒன்று
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
மீன் - கால் கிலோ (நல்ல வறுக்கவும்)
செய்முறை:
மீனை கழுவி சுத்தம் செய்து முள்ளை எடுத்து விட வேண்டும்,
கால் கிலோவை சிறு துண்டுகளாக போடவும். மீதியை நாலாக வெட்டவும்.
மீனில் உப்பு, மஞ்சள் பொடி, கொஞ்சமாக இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பொடியாக அரிந்ததை லேசா பொரித்தால் போதும், மீதியை நல்ல பொரிக்கவும்.
இதற்கு தயிர் தேவையில்லை, கடல் உணவுடன் தயிர் சேர்த்தால் சிலருக்கு அலர்ஜி வரும்.
முதலில் அரிசியை ஊற வைத்து விடுங்கள். நல்ல வாயகன்ற சட்டியாக இருந்தால் நல்லது.
பாதி எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெங்காயத்தை போட்டு வதக்குங்கள்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல கிளறி சிம்மில் வைக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா போட்டு இரண்டு நிமிடம் கழித்து தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
இப்போது தக்காளியில், மிளகாய் தூள், மஞ்சள் துள் போட்டு வதக்கவும்.
பிறகு தக்காளி கூட்டாக வெந்ததும் லேசாக பொரித்து வைத்த மீனை சேர்த்து லேசாக கிளறி, அரை லெமென் பிழியவும்.
இப்போது தனியாக உதிரியாக கீ ரைஸ் தயாரிக்கவும். கிரேவியை மூன்றாக பிரிக்கவும். கீ ரைஸையும் மூன்றாக பிரிக்கவும். மீனை இரண்டாக பிரிக்கவும்
முதலில் கொஞ்சம் கிரேவி, ரைஸ், பொரித்த மீன், கொஞ்சம் நெய். அடுத்து கொஞ்சம் கிரேவி, சாதம், பொரித்த மீன், கொஞ்சம் நெய். அடுத்து கொஞ்சம் கிரேவி, மீதி உள்ள சாதம் மேலே ரெட் கலர் பொடியை கரைத்து தெளித்து மீதி நெய் தெளித்து சமப்படித்தி ஐந்து நிமிடம் தம்மில் வைக்கவும்.
கீ ரைஸ் முதலே செய்து விட்டதால், ஐந்து நிமிடம் முக்கால் வேக்காடு, வடித்து போடுவதாக இருந்தால் இருபது நிமிடம் தம் போடனும்.
இறக்கியதும் உடையாமல் நல்ல கிளறி சாப்பிடவும்.
சுவையான மீன் பிரியானி ரெடி