மீன் பஜ்ஜி 2

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முள் இல்லாத மீன் - அரை கிலோ

மீன் மசாலா:

மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - அரை தேக்கரன்டி

உப்பு - தேவைக்கு

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

வினிகர் - ஒரு தேக்கரண்டி

பஜ்ஜி மாவு கலக்க:

மைதா மாவு - முக்கால் கப்

கார்ன்ஃப்ளார் மாவு - கால் கப்

பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து முள்ளை அகற்றி விட்டு இரண்டு அங்குல நீளம் வெட்டி வினிகர் கலந்த தண்ணீரில் பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு மசாலாகளை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பஜ்ஜி மாவுக்கு கரைக்க கொடுத்துள்ளவைகளை இட்லி மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

ஊறியதும் மாவு கலவையில் மீனை ஒவ்வொன்றாக முக்கி பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: