மீன் பஜ்ஜி 1
தேவையான பொருட்கள்:
முள் இல்லாத மீன் - அரை கிலோ
மீன் மசாலா:
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் - அரை தேக்கரண்டி
பஜ்ஜி மாவு கலக்க:
முட்டை - ஒன்று
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
கரம் மாசாலா தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மைதா - இரண்டு மேசைக்கரண்டி
கடலை மாவு - அரை கப்
கார்ன் ப்ளார் மாவு - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
மீனை சுத்தம் செய்து முள்ளை அகற்றி விட்டு இரண்டு அங்குல நீளம் எடுத்து கொள்ளவும்.
அதில் முதலில் எலுமிச்சைசாறு ஊற்றி சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு எல்லா மசாலாக்களையும் போட்டு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பஜ்ஜி மாவை இட்லி மாவு பதத்திற்கு கரைத்து பத்து நிமிடம் ஊறவைத்து மசாலா போட்டு ஊற வைத்துள்ள மீனை மாவு கலவையில் முக்கி பொரித்தெடுக்கவும்.