மீன் குருமா 1
தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன் - கால் கிலோ
அரைக்க:
பச்சைமிளகாய் - மூன்று
கொத்தமல்லி - கால் கட்டு
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
தேங்காய் - ஒரு பத்தை
முந்திரி - ஐந்து
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
பட்டை - அரை அங்குலம் அளவு
சின்ன வெங்காயம் - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு ஆர்க்
கொத்தமல்லி சிறிது (கடைசியில் மேலே தூவ)
தக்காளி - கால் துண்டு
செய்முறை:
மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவைகளில் முந்திரி, பொட்டுக்கடலை, சோம்பை முதலில் பொடித்து கொண்டு கொத்தமல்லி, பச்சைமிளகாய், தேங்காய், வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த மசாலாவை ஊற்றி தேவைக்கு தண்ணீர் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
கடைசியில் மீனை சேர்த்து அடுப்பின் தீயின் அளவை குறைத்து வைத்து ஏழு நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
சுவையான மீன் குருமா ரெடி.