மீன் கட்லட்
3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
டின் மீன் - 1
வெங்காயம் - 1 (பெரியது)
பச்சை மிளகாய் - 2
உருளைக் கிழங்கு - 2
மல்லி,புதினா - சிறிது
கேரட் - 1
முட்டை - 2
பிரட் க்ரம்ஸ் - தே.அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி வேகவைத்துக் கொள்ளவும்.
கிழங்கு வெந்தப் பின் தண்ணீரை வடித்துவிட்டு ஆற விடவும்.
ஆறிய பின் கிழங்கை மசிக்கவும்.
அதனுடன் மீன்,பொடியாக அரிந்த வெங்காயம்,மிளகாய்,மல்லி,புதினா மற்றும் துருவிய கேரட் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து பிசையவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் அடித்து வைக்கவும்.
மசித்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து முட்டையில் நனைத்து பின் ப்ரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.