மீங்கோரி
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் சேமியான் - அரை கிலோ
முட்டைகோஸ் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
குடைமிளகாய் - 100 கிராம்
தக்காளி - 3
வெங்காயம் - இரண்டு
கொத்தியகறி - 150 கிராம்
கரம் மசாலாத்தூள் - ஒரு கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 கரண்டி
சோயாசாஸ் - 2 கரண்டி
சில்லிசாஸ் - 2 கரண்டி
மிளகுத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
முளைகட்டிய பாசிபயறு - 100 கிராம்
முட்டை -2
எண்ணெய் + நெய் கலந்து - 50 கிராம்
மல்லிகீரை - ஒரு கைப்பிடி
எலுமிச்சைப்பழம் - இரண்டு
உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
கேரட், முட்டைகோஸ், வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் எல்லாவற்றையும் மிக மெல்லியதாக நறுக்கவும்.
கறியுடன் மசாலாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு சட்டியில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் சேமியானை போட்டு அரைவேக்காடாக வெந்ததும் வடித்துவிடவும்.
முட்டையை கலக்கி தனியாக கொத்தி பொரித்துக் கொள்ளவும்.
ஒரு நாண்ஸ்டிக் சட்டியில் எண்ணெய் ஊற்றி முதலில் வெங்காயம், தக்காளியை வதக்கவும். பின் காய்கறிகளைப்போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின் அதில் சோயாசாஸ், சில்லிசாஸ் போட்டு கிளறவும். அதில் கறியை போட்டு அஜினோமோட்டோ போட்டு நன்றாக கிளறி இரண்டு நிமிடம் கழித்து வடித்த சேமியானை போட்டு நன்றாக கிளறவும்.
எல்லாபக்கமும் சேர்ந்தவுடன் முளைகட்டிய பயறை போட்டு இரண்டு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். பரிமாறும் போது எலுமிச்சைச்சாறு பிழிந்து முட்டை மல்லிக்கீரைப் போட்டு பரிமாறவும்.