மிளகு பால் (சளி இருமலுக்கு)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பால் - இரண்டு டம்ளர்
தண்ணீர் - ஒரு டம்ளர்
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
கிராம்பு - ஒன்று
முழு மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
செய்முறை:
மிளகு கிராம்பை போட்டு லேசாக வறுத்து ஆறியதும் கரகரப்பாக பொடிக்கவும்.
பால், தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் அத்துடன் கரகரப்பாக பொடித்த பொடியை சேர்த்து நன்கு காய்ச்சி ஒன்றரை டம்ளராக வற்ற விடவும்.
இப்போது சர்க்கரை, மஞ்சள் பொடி சேர்த்து வடிகட்டி சூடாக குடிக்கவும்.
சுட சுட மிளகு பால் ரெடி.