மிளகு கோழி 2
தேவையான பொருட்கள்:
கோழி - ஒரு கிலோ
வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 150 கிராம்
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 50 கிராம்
மிளகு தூள் - 25 கிராம்
மஞ்சள் தூள் - 5 கிராம்
சீரகம் - 10 கிராம்
எண்ணெய் - 150 கிராம்
தயிர் - 100 மில்லி
கொத்தமல்லி - அரை கட்டு
புதினா - கால் கட்டு
எலுமிச்சை - இரண்டு
பட்டை - ஒரு இன்ச் அளவு இரண்டு
ஏலம், கிராம்பு - தலா மூன்று
உப்பு - தேவைக்கு
செய்முறை:
கோழியை சுத்தம் செய்து தண்ணீரை வடிகட்டவும்.
மிளகு, சீரகத்தை பொடித்து கொள்ளவும்.
சட்டியை காய வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு பொரிய விடவும்.
பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு பூண்டு, அடுத்து கொத்தமல்லி, புதினா, இஞ்சியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நல்ல வதக்கவும்.
பிறகு தக்காளி சேர்க்கவும், தக்காளி வெந்ததும் மிளகு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி வடித்து வைத்துள்ள கோழியை போட்டு நல்ல கிளறி மூடி போட்டு பதினைந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.
வெந்ததும் கொத்தமல்லி தழை சிறிது தூவி பரிமாறவும்.
சுவையான மிளகு கோழி ரெடி.