மிளகு கோழி
தேவையான பொருட்கள்:
கோழி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - மூன்று
தக்காளி - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
தனியாத் தூள் - ஒரு தேக்கரன்டி
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பட்டை - ஒரு இன்ச் அளவு துண்டு இரண்டு
கிராம்பு - மூன்று
ஏலம் - இரண்டு
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாடை போனதும் தக்காளி, பச்சைமிளகாய், உப்பு, கொத்தமல்லி தழை போட்டு வதக்கவும்.
மிளக்காய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள் சேர்த்து வதக்கி சிக்கனை சேர்த்து நல்ல கிளறி பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூன்று விசில் விட்டு இறக்கி இரண்டு பத்தை தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.
சூப்பர் பெப்பர் சிக்கன் ரெடி.