மிளகு கறி வறுவல்
0
தேவையான பொருட்கள்:
மட்டன் - கால் கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 3 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
முழுமிளகு - 2 டேபிள்ஸ்பூன்
முழு ஜீரகம் -2 டேபிள்ஸ்பூன்
தக்காளி பேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
வினிகர் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - 1ஸ்பூன்
மல்லிக்கீரை - 1கைப்பிடி
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
மட்டனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
அதில் அரைகப் தண்ணீர் சேர்த்து 3விசில் விட்டு வேகவிடவும்
பின் தண்ணீரை வற்றவிடவும் ஒரு சட்டியில் எண்ணெய்களை ஊற்றி மிளகைப்போட்டு பொரியவிடவும் பின் ஜீரகம் காய்ந்தமிளகாய்யை போட்டி கிளறி கருவேப்பிலையைப்போட்டு வேகவைத்த கறியை சேர்க்கவும் அதிலே தக்காளி பேஸ்டைப்போட்டு நன்கு எண்ணெய் சுருள வறுக்கவும் மேலே மல்லிக்கீரையை தூவவும்