மிளகு கறி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ

காய்ந்த மிளகாய் - மூன்று

முழு பூண்டு - ஒன்று

மிளகு தூள் - ஒரு மேசைக்கரண்டி

சீரக தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - ஐந்து தேக்கரண்டி

வெங்காயம் - நான்கு

கறிவேப்பிலை - ஐந்து ஆர்க்

செய்முறை:

எண்ணெயை காய வைத்து அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

பிறகு பூண்டை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி கறியை சேர்த்து கிளறி உப்பும் சேர்த்து தீயை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும்.

கடைசியில் மிளகு, சீரக தூள் தூவி மீண்டும் கிளறி ஐந்து நிமிடம் தீயை சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.

குறிப்புகள்: