மில்க் மெய்டு பாயசம்
0
தேவையான பொருட்கள்:
பொடி சேமியா - 1 கப்
ரவை - 2 ஸ்பூன்
மில்க் மெய்டு - 1/2 டின்
நெய் - 1ஸ்பூன் +1 ஸ்பூன்
முந்திரி - 6
உளர் திராச்சை - சிறிது
ஏலக்காய் - 3
கிராம்பு - 2
உப்பு - 1சிட்டிகை
செய்முறை:
ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.
வறுத்த சேமியாவை ஒரு தட்டில் கொட்டிவிடவும்.
அதே பாத்திரத்தில் 1ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி,திராச்சை,ஏலக்காய்,கிராம்பு போட்டு தாளிக்கவும்.
அதில் தேவையானஅளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அதில் சேமியாவைக் கொட்டி வேகவிடவும்.
சேமியா வெந்ததும் ரவை சேர்த்து கிண்டவும்.
ரவையும் வெந்தபின் மில்க் மிய்டு சேர்க்கவும்.அவரவர் இனிப்புக்கு தகுந்தாற் போல் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மில்க் மெய்டு சேக்கலாம்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.ரொம்ப சுவையான மில்க் மெய்டு பாயசம் ரெடி.