மாம்பழ ஜூஸ்
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த மாம்பழம் - ஒன்று
தேங்காய் - நான்கு துண்டுகள்
சர்க்கரை - நான்கு மேசைக்கரண்டி
ஐஸ் க்யூப் - 6
செய்முறை:
மாம்பழத்தை நன்கு கழுவி தோல் உரித்து ஒரு டம்ளர் தண்ணீரில் அப்படியே பிசையவும். மாம்பழ கொட்டை தனியாக வந்துவிடும். தேங்காயை அரைத்து பால் எடுத்து கொள்ளவும்.
இப்போது பிசைந்து வைத்த மாம்பழம், தேங்காய் பால், சர்க்கரை, ஐஸ் க்யூப் சேர்த்து நன்கு மிக்ஸியில் அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றி குடிக்க வேண்டியது தான். சூப்பராக இருக்கும்.