மாசி பிரட்டல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

மாசித்தூள் - 3 டீஸ்பூன்

பெரிய அல்லது சின்ன வெங்காயம் - 100 கிராம்

தக்காளி - 100 கிராம்

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - கால்டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு,உ.பருப்பு - தலா அரைடீஸ்பூன்

கருவேப்பிலை,மல்லி இலை - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

காய்ந்த மாசித்துண்டை இடித்து தூளக்கவும்.வெங்காயம் தக்காளி,மிளகாய்,மல்லி இலை நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும்,கடுகு,உ.பருப்பு,கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய்,மல்லி இலை, தேவைக்கு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தூள் செய்த மாசியை சேர்க்கவும்.நன்கு பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி, சிறிது கூட்டானவுடன் அடுப்பை அணைக்கவும்.

சுவையான மாசி பிரட்டல் ரெடி.

குறிப்புகள்: