மாசிச்சம்பல்
தேவையான பொருட்கள்:
மாசி - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 50 - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
லைம் ஜூஸ் - அரை ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
மாசி கடினமாக இருக்கும், அதனை சுத்தியல் அல்லது அம்மிக்கல்லில் அல்லது ஆட்டு உரலில் வைத்து சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும். துண்டாக்கிய மாசியை உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை மிகப்பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவிக் கொள்ளவும்.
ஒரு பவுளில் பொடி செய்த மாசி, வெங்காயம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து மிக்ஸ் செய்யவும். உப்பு தேவைப்பட்டால் சேர்க்கவும். ஏனெனில் மாசி பொடிக்கும் போது சேர்த்திருக்கிறோம். லைம் ஜூஸ் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
இப்பொழுது சுவையான மாசிச்சம்பல் ரெடி.