மலேஷியன் சிக்கன் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
சிக்கன் - பத்து பெரிய துண்டுகள்
அரைக்க:
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - மூன்று பல்
இஞ்சி - ஒரு துண்டு
கலக்க:
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரக தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரன்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
முட்டை - இரண்டு
சோளமாவு - மூன்று தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அலவு
அலங்கரிக்க:
வெங்காய தாள் - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
லெமென் - ஒன்று வெட்டியது
செய்முறை:
வெங்காயத்தை பொடியாக நறுக்கி, வதக்கி அதனுடன் இஞ்சி, பூன்டு சேர்த்து அரைத்து கலக்க வேன்டிய அனைத்து பொருட்களையும் கலந்து சிக்கனில் போட்டு நல்ல பிசைந்து மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
முட்டையை உடைத்து வெள்ளை கருவில் சோளமாவை சேர்த்து கலக்கி ஊற வைத்து சிக்கனில் தோய்த்து மறுபடியும் இரண்டு மணி நேரம் ஃபிரிட்ஜில் ஊற வைக்கவும்.
பிறகு எண்ணெயை காய வைத்து சிக்கன் துண்டுகளை மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
பொரித்தெடுத்து வெங்காயதாள், கொத்தமல்லி தழை, லெமென் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.