மட்டன் முகலாய் மசாலா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - அரை கிலோ

எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

நெய் - 4 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன்

வெங்காயம் - 250-400 கிராம்

பச்சை மிளகாய் - 3

காஷ்மீரி சில்லி -4- 5

பட்டை - ஒரு துண்டு

ஏலம் - 3

கிராம்பு - 3

மல்லி விதை - 3 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - அரை ஸ்பூன்

மஞ்சள்தூள் - அரைஸ்பூன்

தயிர் - 1 கப்

புதினா மல்லி - கொஞ்சம்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மட்டனை மீடியம் சைஸ் துண்டுகளாக்கி சுத்தம் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்கவும்.

மட்டனை 4 டீஸ்பூன் நெய் விட்டு தண்ணீர் வற்றும் வரை வதக்கி தனியே வைக்கவும்.

வெங்காயம், மல்லி, புதினா, மிளகாய் கட் செய்து வைக்கவும்.

பட்டை, ஏலம், கிராம்பு, காஷ்மீரி சில்லி, மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள் சேர்த்து பவுடர் செய்யவும். பின்பு அதனில் வெங்காயம் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு, இஞ்சி பூண்டு, அரைத்த மசாலா சேர்த்து கொதிவந்ததும் சுருள வதக்கவும். சிவந்து காணப்படும், தயிர் கரைத்து சேர்த்து, மட்டன் சேர்க்கவும். உப்பு போட்டு பிரட்டவும். மிளகாய்,மல்லி புதினா சேர்க்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வைக்கவும். கறி நன்கு வெந்துவிடும். தண்ணீர் இருந்தால் ஓரளவு வற்ற வைக்கவும். சுவையான மட்டன் முகலாய் மசாலா ரெடி. மல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: