மட்டன் மஷ்ரூம் சால்னா
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி - அரை கிலோ
மஷ்ரூம் (காளான்) - கால் கிலோ
பச்சை மிளகாய் - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மல்லிக்கீரை - ஒரு கட்டு
மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
மல்லித்தூள் - 4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
தேங்காய் விழுது - 4 டீஸ்பூன்
ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
பட்டை - ஒரு இன்ச்
எண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:
கறியை சுத்தம் செய்து அத்துடன் பாதி இஞ்சி, பூண்டு விழுது, பாதி உப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொண்டு, மல்லிக்கீரையை நைசாக நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயத்தையும், தக்காளியையும் நைசாக வெட்டிக்கொள்ளவும். மஷ்ரூம்களை இரண்டு பாதிகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து பச்சை மிளகாய், பாதி வெங்காயத்தை ஒன்றன்பின் ஒன்றாக போடவும்.
வெங்காயம் முறுக ஆரம்பிக்கும்போது மீதி இஞ்சி, பூண்டு விழுது போட்டு தீயாமல் முறுகவிடவும்.
பிறகு மல்லிக்கீரை போட்டு வதக்கி ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் போட்டு தாளித்து, உடனே பிரட்டி வைத்துள்ள கறி மற்றும் மஷ்ரூம், தக்காளி, மீதி வெங்காயம் அனைத்தையும் கொட்டி நன்றாக வதக்கி, பிறகு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
கறி பதமாக வெந்தபிறகு கரம் மசாலாத்தூள், மீதி 2 ஸ்பூன் மிளகாய் தூள், மல்லித்தூள், மீதி உப்பு, தேங்காய் விழுது, அனைத்தையும் வெந்த கறியில் போட்டு மூடிபோட்டு 3 நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவையும் சத்தும் மிகுந்த மட்டன் மஷ்ரூம் சால்னா தயார்.