மட்டன் பொடிமாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கைமா - 1/4 கிலோ

சி.வெங்காயம் - 100கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 1 ஸ்பூன்

அரைப்பதற்க்கு:

சிகப்பு மிளகாய் - 4

மிளகு - 1 ஸ்பூன்

கசகசா - 1ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

தேங்காய் பூ - 2 ஸ்பூன்

முந்திரி - 5

இவற்றை நைசாக அரைக்கவும்.

எண்ணெய் , உப்பு -தேவைக்கு

செய்முறை:

குக்கரில் கைமாவுடன், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு 1/4 டம்ளர் த்ண்ணீர் விட்டு 10 நிமிடம் வேகவிடவும்

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பொடியாக நற்க்கிய வெங்காயம் கறிவேப்பிலை அரைத்த மசாலா கலவை, வேக வைத்த கைமா சேர்த்து அடுப்பை மீதமான தணலில் வைத்து வதக்கவும்.

அடிக்கடி அடி பிடிக்கமல் இருக்க கிண்டி விடவும்.

சுருள வந்தவுடன் இறக்கி கொ.மல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: