மட்டன் பிரியாணி (கல்யாண பிரியாணி)
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1 கிலோ
அரிசி - 1 கிலோ
எண்ணெய் - 100 கிராம்
டால்டா - 150 கிராம்
பட்டை - இரண்டு அங்குல துண்டு இரண்டு
கிராம்பு - ஐந்து
ஏலக்காய் - மூன்று
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி - 3 டேபிள் ஸ்பூன் குவியலாக (அ) 150 கிராம்
பூண்டு - 2 டேபிள் ஸ்பூன் குவியலாக (அ) 100 கிராம்
கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
புதினா - 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 8
தயிர் - 225 கிராம்
சிவப்பு மிளகாய் தூள் - 3 1/2 டீஸ்பூன்
மஞ்சள் போடி - 1 பின்ச்
ரெட் கலர் பொடி - 1 பின்ச்
எலுமிச்சை பழம் - 1
நெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும், டால்டாவையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் ஒரு விரல் அளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போடவும்.
அது வெடித்ததும் நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி போடவும்.
நல்ல பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும்.
ஓவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியேதான் வைக்க வேண்டும்.
அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். பிறகு கொத்தமல்லி, புதினாவை போட்டு கிளறவும்.
அதன் பின் தக்காளி பச்சை மிளகாய் போடவும்.
இரன்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும்.
நன்கு எண்ணெயில் எல்லா பொருட்களும் வதங்கியவுடன் மட்டனை போடவும். போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக மூன்று நிமிடம் கிளறவும்.
பிறகு தயிரை நல்ல ஸ்பூனால் அடித்து ஊற்றவும்.
அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேக விடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணெய் மேலே மிதக்கும்.
அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும். ஊற வைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணெயும், எலுமிச்சை பழமும் பிழியவும். வெந்ததும்
நல்ல பதமாக பார்த்து ஓவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடித்தால் போதும். உடனே சிம்மில் வெந்து கொண்டிருக்கும் கிரேவியில் கொட்டவும். கொட்டி சமப்படுத்தி சட்டிக்கு கீழே தம் போடும் கண் தட்டு (அல்லது) டின் மூடி வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு மேலே வடித்த கஞ்சி சட்டியை வைத்து தம்மில் விடவும்.
ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி விட்டு ரெட்கலர் பொடியை அந்த சுடு கஞ்சி இரண்டு டேபிள் ஸ்பூனில் கரைத்து தூவிவிடவும்.
அதன் பின் இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும்.
பிறகு பத்து நிமிடம் புழுங்க விட்டு மேலிருந்து கீழாக நல்ல உடையாமல் பதமாக கிளறி சூடாக பரிமாறவும்.