மட்டன் தக்காளி கூட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் - கால் கிலோ

பெரிய தக்காளி - நான்கு

வெங்காயம் - இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி

கொத்தமல்லி - அரை கொத்து (பாதி தாளிக்க, மீதி கடைசியில் தூவ)

பச்சை மிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

கரம் மசாலா - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தயிர் - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - மூன்று தேக்கரண்டி

டால்டா - அரை தேக்கரண்டி

பட்டை - ஒரு சிறிய துண்டு

செய்முறை:

முதலில் கறியை சுத்தம் செய்து தன்ணீர் வட்கட்டி தனியாக வைக்கவும்.

குக்கரில் எண்ணெய், டால்டா இரண்டையும் சேர்த்து சூடானதும் ஒரு சிறிய பட்டை போட்டு வெங்காயத்தை பொடியாக அரிந்து போடவும்.

வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, ரெட் கலர் சேர்த்து நல்லா வதக்கி சிம்மில் மூன்று நிமிடம் வேக விடவும்.

வெந்ததும் இப்போது மட்டனை சேர்த்து நல்ல பிரட்டி தயிர் சேர்க்கவும், சேர்த்து அதிலேயே தண்ணீர் இருந்தால் தண்ணீர் சேர்க்க வேண்டாம். இல்லை என்றால் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்றாவது விசில் வரும் போது ஆஃப் பண்ணவும்.

ஆவி அடங்கியதும், திறந்தால் தண்ணீர் நிறைய இருந்தால் குக்கரை திறந்த நிலையில் சிம்மில் வைத்து கூட்டானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

குறிப்புகள்: