மட்டன் சேமியா பிரியாணி
தேவையான பொருட்கள்:
சேமியா - 400 கிராம் பாக்கெட்
கறி - அரை கிலோ
வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - 400 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - நான்கு தேக்கரண்டி
எண்ணெய் - 100 கிராம்
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
டால்டா - இரண்டு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
கொத்தமல்லி தழை - அரை கட்டு
புதினா - பத்து இதழ்
பச்சை மிளகாய் - நான்கு
பட்டை - ஒரு அங்குலம் துண்டு இரண்டு
ஏலம், கிராம்பு - தலா இரண்டு
தயிர் - இரண்டு மேசைக்கரண்டி
செய்முறை:
சேமியாவை கருக விடாமல் சிவக்க டால்டா சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.
எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், போட்டு வெங்கயத்தை அரிந்து போட்டு வதக்கவும். வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தக்களியை போட்டு மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிபோட்டு தக்காளியை வேக விடவும்.
வெந்ததும் கறியை போட்டு இரண்டு மூன்று நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு தீயை சிம்மில் வைத்து கறியை போட்டு வேக விடவும்.
சேமியா அளவு ஒன்றுக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் சேமியாவை கொட்டி இரண்டு மூன்று கொதி வந்ததும் சிம்மில் வைத்து வேக வைத்து அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு பத்து, பதினைந்து நிமிடம் கழித்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுமார் ஐந்து பேர் சாப்பிடலாம்