மட்டன் சுக்கா வறுவல்
தேவையான பொருட்கள்:
மட்டன் - கால் கிலோ (எலும்பில்லாதது)
உப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
தனியாத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
பட்டர் (அ) டால்டா - அரை தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - சிறிது
லெமென் ஜூஸ் - அரை தேக்கரண்டி
பட்டை - ஒன்று சிறியது
செய்முறை:
மட்டனை கழுவி சுத்தம் செய்து மிகச்சிறிய துண்டுகளாக போட்டு தண்ணீரை நன்கு வடித்து அதில் மிளகாய் தூள், இஞ்சி பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, தனியாத் தூள் அனைத்தும் போட்டு ஒரு டம்ளர் தண்ணீரும் ஊற்றி வெளியிலேயே சிம்மில் வைத்து வேக விடவும்.
வெந்ததும் தண்ணீர் முழுவதும் வற்றி சுருளவிட்டு இறக்கவும்.
ஒரு இரும்பு வாணலியில் எண்ணெய் + பட்டரை ஊற்றி அதில் பட்டையை போட்டு வெடித்ததும் அதில் வெந்த மட்டனை போட்டு நன்கு வறுத்து இறக்கும் போது லெமென் ஜூஸ், கொத்துமல்லித் தழை தூவி இறக்கவும்.