மட்டன் சப்ஜி குருமா
தேவையான பொருட்கள்:
மட்டன் - கால் கிலோ (பொடியாக அரிந்து கொள்ளவேண்டும்)
உருளைக்கிழங்கு - கால் கிலோ
கேரட் - இருநூறு கிராம்
ப்ரெஷ் பட்டாணி - நூறு கிராம்
தக்காளி - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
கொத்தமல்லி - ஒரு கட்டு
புதினா - அரை கட்டு
பச்சைமிளகாய் - நான்கு
மிளகாய் துள் - இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
தயிர் - ஐம்பது மில்லி
தேங்காய் - ஒரு மூடி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் + டால்டா - ஐம்பது மில்லி
பட்டை - இரண்டு அங்குலம் மூன்று
கிராம்பு - ஆறு
ஏலக்காய் - நான்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசைக்கரண்டி குவியலாக
செய்முறை:
முதலில் கறியை பொடியாக அரிந்து தண்ணீரை வடித்து வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு, கேரட்டை பொடியாக அரிந்து வைக்க வேண்டும்.
ஒரு பெரிய சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடு வந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடிக்க விட்டு வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு கிளறி ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவேண்டும்.
நன்கு வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு கலர் மாறி பச்சை வாடை போகும் வரை நன்கு கிளறி சிம்மில் வைக்கவேண்டும். அடிப்பிடிக்காமல் பார்த்து கொள்ளவும்.
பிறகு கொத்துமல்லி, புதினாவை சிறிது வைத்து விட்டு போட்டு கிளறவேண்டும் ஒரு நிமிடம் கழித்து கறியையும், பச்சைமிளகாயையும் போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து உருளைக்கிழங்கு, கேரட், தக்காளியை போட்டு நன்கு கிளறி மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி பத்து நிமிடம் சிம்மில் விட்டு வேக விட வேண்டும்.
பிறகு தயிரை அடித்து கலக்கி விட்டு சிறிது தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.
கடைசியில் தேங்காயை மை போல் அரைத்து தேவைக்கு சால்னாவிற்குண்டாண தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
கடைசியில் மீதி எடுத்து வைத்துள்ள கொத்தமல்லி, புதினாவை போட்டு இறக்க வேண்டும்.
பூரிக்கு ஏற்ற சுவையான மட்டன் சப்ஜி குருமா ரெடி.