மட்டன் கிரேவி





தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
தேங்காய்- கால்மூடி
பச்சைமிளகாய்-2
கொத்தமல்லி- ஒரு கொத்து
புதினா- சிறிதளவு
வெங்காயம்-2
சின்ன வெங்காய விழுது- கால் கப்
தக்காளி-3
மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
மிளகாய் தூள்- கால் ஸ்பூன்
கறிமசாலா தூள்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது-3 ஸ்பூன்
பட்டை,ஏலக்காய்,லவங்கம் பொடி- கால் ஸ்பூன்
முந்திரி- 5
செய்முறை:
தேங்காய்,முந்திரி அரைத்துக்கொள்ளவும்
எண்ணெயில் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கவும்
சுருண்டதும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், வாசனை தூள் உப்பு சேர்த்து வதக்கவும்
பின் சின்ன வெங்காய விழுது மற்றும் தக்காளி சேர்த்து குழைய வேகவிடவும்
கறி மசாலா தூளை நீரில் கட்டியில்லாமல் கரைத்து அதில் சேர்த்து கொதிக்கவிடவும்
மசாலா வாசனை போனதும் கறி சேர்த்து வேகவிடவும்.
கறி முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து பிரட்டவும்.