மட்டன் கபாப் (BBQ) Arabic type

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா (அ) பீஃப் கீமா - ஒரு கிலோ

பட்டர் - ஐம்பது கிராம்

சீரக தூள் - மூன்று தேக்கரண்டி

மிளகு தூள் - இரண்டு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி

செலரி இலைகள் - ஒரு கப் பொடியாக நறுக்கியது

லெமென் ஜூஸ் - இரண்டு தேக்கரண்டி

வெங்காயம் - மூன்று

இஞ்சி பூன்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

கீமாவை சுத்தம் செய்து ஒரு துணியில் கட்டி தண்ணீர் முழுவதையும் வடிகட்டவும்.

வெங்காயத்தை அரைத்து வடிகட்டிய கீமாவில் சேர்த்து அதில் உப்பு, மிளகு தூள், சீரக தூள், பேக்கிங் பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய செலரி இலைகள், லெமன் ஜூஸ், பட்டர் எல்லாவற்றையும் கீமாவில் சேர்த்து பிரட்டி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு ஒரு கை நீளத்திற்கு கபாப் செய்யும் குச்சியில் சொருகி பிடித்து பார்பி கியூ செய்யும் அடுப்பில் தீ மூட்டி சுட்டெடுக்கவும்.

கபாப் சுட்டதும் குபூஸ், ஹமூஸுடன், லெட்டுஸ் இலைகளையும் சேர்த்து சாப்பிடவும்.

குறிப்புகள்: