மஞ்சள் பீர்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - அரை லிட்டர்

பாதாம் - 100 கிராம்

ஏலக்காய் - மூன்று

சர்க்கரை - அரை டம்ளர்

குங்மப்பூ - இரண்டு பின்ச்

நெய் - இரண்டு தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - மூன்று

ரவை - அரை கப் (லேசாக வறுத்து கொள்ளவும்)

செய்முறை:

பாதாமையும், முந்திரியையும் கொதிக்கிற வெந்நீரில் போட்டு இரவே ஊற போட்டு விடுங்கள். காலையில் நன்கு உப்பி பெரியதாக இருக்கும். தோலுரிக்கவும் ஈஸியாக இருக்கும்.

குங்மப்பூவை ஒரு கரண்டி சூடான பாலில் ஊற வைக்கவும்.

இப்போது பாதாம் முந்திரியையும் கழுவி அத்துடன் ஊற வைத்த குங்மப்பூவையும் சேர்த்து சுத்தமான காரமில்லாத மிக்ஸியில் கொஞ்சமாக பால் ஊற்றி மையாக அரைத்தெடுக்கவும்.

பாலில் ஏலக்காய் போட்டு காய்ச்சவும். அதில் தீயை குறைத்து அரைத்த விழுதையும் சேர்த்து காய்ச்சவும். கொதிக்கும் போது வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக தூவி தூவி கட்டி பிடிக்காமல் கிளறவும். பிறகு சர்க்கரை சேர்த்து நெய்யையும் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: