மஞ்சள் ஆப்பம்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 டம்ளர்

பழைய சாதம் - 1/2 கப்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

சமையல் சோடா - 1பின்ச்

உப்பு - சுவைக்கு

தேங்காய் - 1

வெங்காயம் - 1 (சிறிது)

பச்சைமிளகாய் - 3

முருங்கை இலை - 1கைப்பிடி அளவு

சோம்பு - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

முட்டை - 1

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

அரிசி, வெந்தயம் இரண்டையும் முதல் நாளே ஊற விடவும்.

மறுநாள் சாதத்துடன் அரிசியையும் சேர்த்து கெட்டியாக அரைத்து, 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

தேங்காயுடன், சோம்பு சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுத்துக்கொள்ளவும்.

இத்துடன், அடித்த முட்டை, உருக்கிய நெய், சோடா, உப்பு, முருங்கை இலை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

மாவு, தோசை மாவு பதத்திற்கும் சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

ஆப்பசட்டியை அடுப்பில் வைத்து, சூடேறியதும், ஒரு குழிக்கரண்டி அளவு எடுத்து ஆப்பம் வார்க்கவும்.

இத்துடன் தேங்காய்ப்பால், மீன், மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, வெஜ் குருமா அனைத்துக்கும் ஏற்றது.

குறிப்புகள்: