மசால் தோசை
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - அரை கிலோ
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கடுகு - சிறிது
சீரகம் - சிறிது
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகைப் போட்டு வெடித்தவுடன் சீரகத்தையும், கடலைப்பருப்பையும் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.
பிறகு வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போட்டு அத்துடன் மஞ்சள் தூள், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கைப் போட்டு புரட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு தோசை மாவை கல்லில் வழக்கம் போல் ஊற்றி, செய்து வைத்துள்ள மசாலாவை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நடுவில் வைத்து தோசையை மடித்தோ அல்லது சுருட்டியோ எடுக்கவும்.