மசாலா பூரி
0
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு டம்ளர்
கோதுமை - ஒரு டம்ளர்
பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
தயிர் - இரண்டு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
மசாலாவிற்கு:
கருப்பு எள் - ஒன்றரை தேக்கரண்டி
வெள்ளை எள் - ஒன்றரை தேக்கரண்டி
ஓமம் - அரை தேக்கரண்டி
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பூரி சுட தேவையான அளவு
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள மசாலாவை லேசாக வறுத்து கொள்ள வேண்டும்.
பிறகு மைதா, கோதுமையை கலந்து அதில் உப்பு, தயிர், பட்டர் உருக்கி போட்டு மிளகாய் தூளும் சேர்த்து வறுத்து வைத்துள்ளதையும் போட்டு நல்ல பிசறி தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு பூரிகளாக பொரித்தெடுக்கவும்.