மசாலா பால்
0
தேவையான பொருட்கள்:
மசாலா பொடி தயாரிக்க:
பாதாம் - 50 கிராம்
பிஸ்தா - 20 கிராம்
ஏலக்காய் - எட்டு
சஃப்ரான்(குங்குமப்பூ) - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் - அரை தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மசாலா பால்:
பால் - ஒரு டம்ளர்
சர்க்கரை - 1 1/2 தேக்கரண்டி
மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
பாதாம், பிஸ்தா, ஏலக்காய், குங்குமப்பூ, ஜாதிக்காய், மிளகு எல்லாவற்றையும் மிக்ஸியில் பொடித்து ஒரு காய்ந்த டப்பாவில் போட்டு வைக்கவும்.
ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை போட்டு, சர்க்கரையும் சேர்த்து காய்ச்சி குடிக்கவும்.