மக்ரோணி (இனிப்பு)
0
தேவையான பொருட்கள்:
மக்ரோணி - இரண்டு கப்
தண்ணீர் - ஐந்து கப் (வேக வைக்க)
உப்பு - கால் தேக்கரண்டி
பால் - மூன்று கப்
முந்திரி, பாதாம் - எட்டு
நெய் - அரை தேக்கரண்டி
ஏலம் - மூன்று
சர்க்கரை - அரை கப்
செய்முறை:
மக்ரோணியை குக்கரில் போட்டு உப்பு சேர்த்து ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
பாலில் ஏலக்காய் போட்டு கொதிக்க விடவும்.
முந்திரி பாதாமை அரைத்து ஊற்றவும்.
கொதி வந்ததும் சர்க்கரையை போட்டு வேக வைத்துள்ள மக்ரோணியையும் சேர்த்து நெய்யையும் சேர்த்து இறக்கவும்.
தேவைப்பட்டால் இன்னும் நெய்யில் பாதாம், பிஸ்தா, முந்திரி, கிஸ்மிஸ் பழம் எல்லாம் வறுத்து கூட சேர்த்து கொள்ளலாம்.