மக்மல் பூரி

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

சர்க்கரை - 2 கப்

தேங்காய் - 1 மூடி

அரிசிமாவு - 50 கிராம்

நெய் - 100 கிராம்

எண்ணெய் - 1/2 லிட்டர்

உப்பு - ஒரு சிட்டிகை

கலர் பவுடர் - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய் பாலை மைதா மாவில் ஊற்றி, உப்பு சேர்த்து பூரி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அரிசிமாவில் நெய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

மைதா மாவு உருண்டைகளை பூரி போல் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பூரி மேல் சிறிது அரிசிமாவைத் தடவி அதன்மீது மற்றொரு பூரியை வைக்கவும்.

அதன்மீதும் அரிசி மாவினைத் தடவி மேல் மற்றொரு பூரியை வைக்கவும். இப்படியே ஐந்து பூரிகளை வைக்கவும்.

அதனை சேர்த்து உருளையாக உருட்டவும். பிறகு அதனைக் குறுக்காக 3 அல்லது 4 துண்டுகளாக வெட்டவும்.

ஒவ்வொரு துண்டையும் பூரி கட்டைக் கொண்டு, வெஜிடபிள் பப்ஸ் தோற்றத்திற்கு லேசாக தேய்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூரிகளை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகு தண்ணீராக இல்லாமல் கெட்டியாக இருக்குமாறு காய்த்துக் கொள்ளவும்.

பாகில் கலர் பொடியைச் சேர்த்துக் கொள்ளவும். பொரித்து வைத்துள்ள பூரித் துண்டுகளை எண்ணெய் வடித்து பாகில் போட்டு எடுக்கவும்.

குறிப்புகள்: