ப்ளைன் டால்(குழந்தைகளுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைக்க

துவரம் பருப்பு - ஒரு கப்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று (நான்காக நறுக்கியது)

தாளிக்க

வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)

கடுகு - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - இரண்டு

பச்சை மிளகாய் - ஒன்று

பூண்டு - இரண்டு பல்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

கொத்தமல்லி தழை - சிறிது மேலே அலங்கரிக்க

எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

நெய் -ஒரு டீஸ்பூன்

உப்பு - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பருப்புடன் வேகவைக்க வேண்டியதை போட்டு வேகவைத்து கொள்ளவும். பிறகு ஆற வைத்து மிக்ஸியில் அல்லது பிளென்டரில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (மையாக அரைக்கவேண்டாம்).

மிக்ஸியில் அரைத்ததில் உப்பு, கொத்தமல்லி தழை போட்டு ஒரு கொதி கொதித்தும் இறக்கவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் பொடியாக நறுக்கிய பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி லேசாக கலர் மாறியதும் பூண்டை தட்டி போட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பருப்பில் கொட்ட வேண்டும்.

கடைசியில் நெய் ஒரு ஸ்பூன் ஊற்றி இறக்கவும்.

குறிப்புகள்: