ப்ளைன் ஜெல்லி





தேவையான பொருட்கள்:
கடற்பாசி(சைனா க்ராஸ்) - 10 கிராம்
தண்ணீர் - ஒரு லிட்டர்
சீனி - 6 - 8 டேபிள் ஸ்பூன்
ரோஸ்மில்க் எசன்ஸ் - 5 துளிகள்
செய்முறை:
முதலில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். பின் அதில் கடற்பாசியை போடவும்.
கடற்பாசி நன்கு கரைந்ததும் சீனி சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைக்கவும்.
ஒன்று அல்லது இரு தட்டுக்களில் ரோஸ்மில்க் எசன்ஸ் விடவும்.
பின்பு அந்த தட்டில் காய்ச்சிய கடற்பாசியை விடவும். இது பார்ப்பதற்கு பின்க் கலரில் கண்ணாடி போல் இருக்கும்.
பின்பு ஃப்ரிட்ஜில் 1-2 மணி நேரம் உறைய வைத்து விருப்பமான வடிவத்தில் கட் செய்து பரிமாறவும். சுவையான ஜில்லென்ற ஜெல்லி ரெடி.