ப்ளைன் கடல்பாசி

on on on off off 6 - Good!
3 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடற்பாசி (சைனா கிராஸ்) - 10 கிராம்

தண்ணீர் - ஒரு லிட்டர்

சீனி - 6 - 8 மேசைக்கரண்டி

ரோஸ்மில்க் எசன்ஸ் அல்லது வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

பால் - ஒரு கப் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதி வந்ததும் அதில் கடற்பாசியை சேர்க்கவும்.

கடற்பாசி கரைந்ததும் அதனுடன் சீனியை சேர்த்து காய்ச்சவும்.

கடற்பாசி மற்றும் சீனி கரைந்ததும் இறக்கி வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

இரண்டு தட்டில் பால் மற்றும் எசன்ஸை தனித்தனியாக எடுத்து கொள்ளவும்.

அதில் காய்ச்சிய கடற்பாசி நீரை சேர்க்கவும். பால் உள்ள தட்டில் கடற்பாசியுடன் சில துளி எசன்ஸ் சேர்க்கவும். இப்பொழுது தட்டில் ஊற்றிய கடற்பாசி ரெடி.

இதனை ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் 2 மணி நேரங்கள் வைத்திருந்தால் அப்படியே செட்டாகிவிடும். பின்பு விருப்பப்பட்ட வடிவங்களில் நறுக்கி பரிமாறவும்.

சுவையான ஜில்லென்ற ஜெல்லி ரெடி.

குறிப்புகள்:

இது உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு காலத்தில் தினமும் செய்வது வழக்கம். விருந்து சமயம் கூட டெசர்ட் உடன் பரிமாறலாம். இதனை நட்ஸ் போட்டு அலங்கரித்து பரிமாறலாம். குழந்தைகள் மனதை கவரும் ஈசியான ரெசிப்பி.