ப்ரெட் உப்புமா
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சால்ட் ப்ரெட் - 4 ஸ்லைஸ்
எண்ணெய் - 2 டேபிள்ஸ் பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
முட்டை - 2
பச்சை மிளகாய் - 2
மல்லி, கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 2
மஞ்சள் பொடி - சிறிது
உப்பு - தேவைக்கு
செய்முறை:
ப்ரெட்டை சிறிய துண்டாக்கிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி, கறிவேப்பிலை கட் செய்து கொள்ளவும். முட்டையை உப்பு போட்டு அடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் வீட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து மிளகாய், வெங்காயம் கறிவேப்பில்லை மல்லி இலை போட்டு வதக்கி மஞ்சள் பொடி, உப்பு போட்டு வதக்கி, முட்டை சேர்த்து பிரட்டி வதக்கவும்.
எல்லாம் வதங்கியவுடன் ப்ரெட் சேர்த்து பிரட்டி ப்ரெட் சூடானதும் இறக்கி பரிமாறவும்.
சுவையான ப்ரெட் உப்புமா ரெடி.