ப்ரான் ரெட் சில்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஊற வைக்க:

சிறிய இறால் - 100 கிராம்

தக்காளி - ஒன்று (அரைத்து கொள்ளவும்)

கார்லிக் சில்லி சாஸ்- ஒரு மேசைக்கரண்டி

டொமேட்டோ கெட்சப் - ஒரு மேசைக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி

மேகி கியூப் - கால் தேக்கரண்டி

இஞ்சி - ஒரு தேக்கரண்டி (பொடியாக நறுக்கவும்)

தாளிக்க:

பட்டர் - ஒரு மேசைக்கரண்டி

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - மூன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

கேப்சிகம் - இரண்டு மேசைக்கரண்டி

கொத்தமல்லி தழை - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து ஊறவைக்க வேண்டியவைகளை கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து ஊறவைத்த இறாலை போட்டு நன்கு கிளறி தீயை சிம்மில் வைத்து வேக விட்டு இறக்கவும்

குறிப்புகள்: