ப்ரட் ஆம்லெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரட் ஸ்லைஸ் - 5

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சைமிளகாய் - 1

பெருஞ்சீரகத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும் பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கவும்

முட்டையை உடைத்து ஒரு கோப்பையில் ஊற்றி எண்ணெய் தவிர எல்லாப் பொருளையும் போட்டு நன்கு கலக்கவும்.

ஒரு நாண் ஸ்டிக் தவாவில் எண்ணெயை ஊற்றி அதில் ஒரு ப்ரட் அளவிற்கு முட்டை கலவையை ஊற்றவும்.

அதன் மேலே ஒரு ப்ரட் துண்டை வைத்து கீழே சிவந்ததும் திருப்பிப்போட்டு எண்ணெய் சுற்றிலும் ஊற்றி லேசாக சிவந்ததும் எடுக்கவும்.

சூடாக தக்காளி கெட்சப் உடன் பரிமாறவும்.

குறிப்புகள்: