பூண்டு கோழி(கேஸ் பிராப்ளத்திற்கு)
தேவையான பொருட்கள்:
பூண்டு கோழி
கோழி - அரை கிலோ
பூண்டு - ஒன்று பெரியது
பச்சைமிளகாய் - நான்கு
மிளகு - அரை டீஸ்பூன்
வெங்காயம் - மூன்று பெரியது
தக்காளி பேஸ்ட் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
குடைமிளகாய் - சிறிது அலங்கரிக்க
எண்ணெய் - நான்கு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கோழியில் மிளகு, பச்சைமிளகாய், பூண்டு மூன்றையும் அரைத்து உப்பு போட்டு இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி பேஸ்ட் போட்டு வதக்கவும்.
பிறகு ஊறவைத்த கோழியை போட்டு அந்த எண்ணெயிலேயே சிம்மில் வைத்து வேகவிடவும்.
குடைமிளகாயை சதுர வடிவில் வெட்டி அலங்கரிக்கவும்.
இது சாதம், ரொட்டி, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.