பூசணிக்காய் பொரியல்
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மஞ்சள் பூசணிக்காய் - 1/2 கிலோ
நாட்டு தக்காளி - 2
பச்சைமிளகாய் - 4
மிளகாய்தூள் - 1/2ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை:
பூசணிக்காய்,தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
மிளகாயை கீறி வைக்கவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்
கடுகு வெடித்ததும் மிளகாயை சேர்க்கவும்
மிளகாய் சற்று வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
பின் பூசணிக்காயை சேர்த்து கிண்டவும்
மிளகாய்தூள்,உப்பு சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேகவிடவும்
காய் வெந்து தண்ணீர் வற்றியதும் இறக்கி சூடாக பறிமாறவும்