புளிகறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் 1/4 கி

புளிப்பு மாங்காய் பெரியது - 1

இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 1தே. க

மஞ்சள் தூள் - தே. க

மிளகாய் தூள் - 1 தே. க

மல்லிதூள் - 1 தே,க

சோம்பு தூள் - 1/2 த்.ஏ. க

பச்சை மிளகாய் - 3

கடுகு - 1/2 தே. க

எண்ணெய் - 2 தே. க

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு -தேவையான அளவு..

செய்முறை:

வெள்ளரிக்காயையும், மாங்காயையும், பொடியாக அர்ந்து கொள்ளவும்.

பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும்.

ஒரு சட்டியை சூடாக்கி,எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

வெள்ளரிக்காய் . இங்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். அரை வேக்காடு வெந்ததும்,பச்சை மிளகாய் அரை கப் தண்ணீர் சேர்த்து சட்டியை மோடி போட்டு வேக விடவும்.

வெள்ளரிக்காய் வெந்து தண்ணீர் வற்றியதும். மாங்காயை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடு ம. தூள்,மி.தூள், சோம்பு தூள் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். மாங்காய் நன்றாக வெந்ததும் ஒரு கரண்டியல் நன்கு மசித்து விடவும் .

வெந்தயம், மெளகு, சீரகம் மூறையும் சேர்த்து ஒரு ஸ்பூன் எடுத்து வெறும் சட்டியில் வறுத்து பொடித்து புளிகறியில் மீது தூவி இறக்கி விடவும்.

குறிப்புகள்: