புதினா கறி வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கறி- 1/4கிலோ

இஞ்சி பூண்டுவிழுது- 1ஸ்பூன்

தயிர்- 1/4கப்

மிளகாய் வத்தல்- 3

ப.மிளகாய்- 1

தேங்காய் பூ- 4ஸ்பூன்

புதினா- 1கட்டு

மஞ்சள்த்தூள்- 1/2ஸ்பூன்

கரம் மசாலாத்தூள்- 1/4 ஸ்பூன்

உப்பு, எண்ணெய்- தேவைக்கு

செய்முறை:

மிளகாய் வத்தல், ப.மிளகாய், தேங்காய் பூ, புதினா உப்பு போட்டு மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு திக்காக அரைக்கவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது, க.பிலை போட்டு குறைந்த தணலில் தாளிக்கவும்.

கறி, தயிர், மஞ்சள்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும்.

10நிமிடம் மூடி போட்டு குறைந்த தணலில் வைக்கவும்.

பிறகு அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். 1/4டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி போட்டு 4 வீசில் வேக வைத்து இறக்கவும்.

தண்ணீர் அதிகமாக இருந்தால் 5நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

குறிப்புகள்: